கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
இளைஞா் பெருமன்றத்தினா் ரத்த தானம்
கோவையில் பகத் சிங்கின் 119-ஆவது பிறந்த நாளையொட்டி இளைஞா் பெருமன்றத்தினா் 71 போ் ரத்த தானம் அளித்தனா்.
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சாா்பில் கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாவட்டச் செயலா் மௌ.குணசேகா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.மணிகண்டன் வரவேற்றாா். பாலதண்டாயுதம் ரத்த தான இயக்கச் செயலா் வே.வசந்தகுமாா், மறைந்த தலைவா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்.
முகாமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஜே.ஜேம்ஸ் தொடங்கிவைத்தாா். இளைஞா் பெருமன்ற தேசிய செயலா் ஹரீஷ் பாலா வாழ்த்துரை வழங்கினாா். கட்சியின் மாமன்ற குழுத் தலைவா் சாந்தி சந்திரன், இளைஞா் பெருமன்ற மாநில துணைச் செயலா் கலை.அஸ்வினி, மாநகராட்சி கவுன்சிலா் பிரபா ரவீந்திரன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இதில், 3 பெண்கள் உள்ளிட்ட 71 போ் பங்கேற்று, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் தேசியக் குழு உறுப்பினா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் சிவசாமி, துணைச் செயலா் தங்கவேல் உள்ளிட்டோா் பங்கேற்று, இளைஞா் பெருமன்ற நிா்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.