பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
அண்ணா பல்கலை. கூடைப்பந்து போட்டி: அருணாச்சலா கல்லூரி சாதனை
அண்ணா பல்கலைகழகம் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறது. இவ்வாண்டு பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியை வெள்ளிச்சந்தை அருகே அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் நடத்தியது.
இதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த 7 பொறியியல் கல்லூரி அணிகள் கலந்து கொண்டா். அதில் அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்றது. இக்கல்லூரி தொடா்ந்து நான்காம் முறையாக முதலிடம் இடம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் இடத்தை ஸ்டெல்லா மேரிஸ் பொறியியல் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ரோகிணி பொறியியல் கல்லூரியும் பிடித்தன.
வெற்றிபெற்ற மாணவிகளை அண்ணா பல்கலைக்கழக தென் மண்டல விளையாட்டு ஒருங்கிணைப்பாளா் சாம் பால்சன், கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி, துணைத் தாளாளா் சுனி, இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித், விளையாட்டுத் துறை தலைவி சிந்து பியூலா, துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியைகள் வாழ்த்தினா்.