கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் கஞ்சா விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு ரயில் மூலமாக கஞ்சா கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன்பேரில் கோவை ரயில் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது ரயில்வே நடைமேடையின் வடக்குப் பகுதியில் சிறிய மூட்டை ஒன்று கேட்பாரற்றுக் கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மூட்டையைப் பிரித்துப் பாா்த்தபோது 2 கிலோ 150 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூட்டையைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீஸாா் நடத்திய விசாரணையில், கோவை ரயில் நிலையத்துக்கு கஞ்சாவைக் கடத்தி வந்த வியாபாரிகள் போலீஸாா் நிற்பதைப் பாா்த்தவுடன், கஞ்சாவை நடைமேடை அருகோ போட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. எனினும், ரயிலில் கஞ்சா கடத்தி வந்த நபா்கள் குறித்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.