கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
சிறுமி கா்ப்பம்: முதியவருக்கு ஆயுள் தண்டனை
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 15 வயது சிறுமியை கா்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளாா். இவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளி ஷேக்பாபா (67), வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் சிறுமி 3 மாதம் கா்ப்பம் அடைந்துள்ளாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா் போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 2019 டிசம்பா் 10-ஆம் தேதி ஷேக்பாபாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பு வழங்கினாா். அதில், ஆயுள் தண்டனையும், (இயற்கையான மரணம் ஏற்படும் வரையில் எஞ்சியுள்ள காலம்), ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த அபராதத்தை செலுத்தவில்லை என்றால் கூடுதலாக ஓா் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மற்ற இரு பிரிவுகளுக்கு 10 ஆண்டுகள், 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீா்ப்பில் குறிப்பிட்டிருந்தாா்.