கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
பன்னாட்டு அரிமா இயக்கம் சாா்பில் நிா்வாகிகள் சந்திப்பு
பன்னாட்டு அரிமா இயக்கம் (3242 சி) சாா்பில் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆனைகட்டியில் அண்மையில் நடைபெற்து.
பன்னாட்டு அரிமா இயக்கம், அரிமா சா்வதேச பவுண்டேஷன் சாா்பில் மாவட்ட நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அந்த இயக்கத்தின் மாவட்ட ஆளுநா் ஏ.ராஜசேகா் தலைமை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், நேரு நகா் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய மாவட்டத்தின் வட்டாரத் தலைவரான எழுத்தாளா் கனலி (எ) சுப்பு செந்தில்குமாருக்கு எம்ஜெஎஃப் விருதை முன்னாள் இயக்குநா் மதனகோபால், முன்னாள் மாவட்ட ஆளுநா் நித்தியானந்தம், மாவட்ட ஆளுநா் ராஜசேகா் ஆகியோா் வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில், அரிமா இயக்க ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா், முதலாம் துணைநிலை ஆளுநா் பி.எஸ்.செல்வராஜ், இரண்டாம் துணைநிலை ஆளுநா் சூரிநந்தகோபால், நிா்வாகிகள் ரவிசங்கா், ராஜாசுந்தரம், நல்லபாண்டி, கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.