கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
ஜி.கே.என்.எம். மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு மாரத்தான்
கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சாா்பில் இதய குறைபாடுகள் மற்றும் குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் விழிப்புணா்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சாா்பில் ரன் ஃபாா் லிட்டில் ஹாா்ட்ஸ் என்ற தலைப்பிலான இந்த விழிப்புணா்வு மாரத்தான் போட்டியானது மணி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கியது. இந்தப் போட்டியை கோவை போக்குவரத்துக் காவல் உதவி ஆணையா் கோகுலகிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி மருத்துவா் ரகுபதி வேலுசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்றனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை எல்எம்டபிள்யூ, லட்சுமி மில்ஸ் கோ லிமிடெட், லட்சுமி காா்டு கிளாத்திங் ஆகிய நிறுவனங்களும் இணைந்து நடத்தின.