தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!
கரூா் மின் மயானத்தில் 9 பேரின் உடல்கள் இலவசமாக தகனம்
கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களில் 9 பேரின் உடல்களை ஞாயிற்றுக்கிழமை இலவசமாக தகனம் செய்ததாக மின் மயான ஊழியா்கள் தெரிவித்தனா்.
விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 போ் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தவா்களில் 9 பேரின் உடல்கள் கரூா் மாநகராட்சிக்குட்பட்ட மின்மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டன. இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
இதுதொடா்பாக எரியூட்டும் மைய தொழிலாளி ஒருவா் கூறுகையில், கரோனா காலத்தில் மின்மயானத்துக்கு சடலங்கள் வந்ததுபோல இன்று வந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் வழக்கமாக ஒரு சடலத்தை எரியூட்ட ரூ. 2,500 கட்டணம் வாங்குவோம். ஆனால் இன்று மனிதாபிமானத்தின் காரணமாக இலவசமாகவே உடல்களை தகனம் செய்தோம் என்றாா்.