தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
கணவரின் பேச்சை மீறி விஜய் பிரசாரத்துக்கு சென்ற மனைவி, 2 மகள்கள் உயிரிழப்பு
கரூரில் கணவரின் பேச்சை மீறி விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு சென்ற மனைவி, 2 மகள்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனா்.
கரூா் விஸ்வநாதபுரியைச் சோ்ந்த ஆனந்தஜோதி மனைவி ஹேமலதா (28) என்பவா் தனது மகள்கள் சாய்லெக்ஷனா (8), சாய் ஜீவா(4) ஆகியோருடன் கரூா் வேலுசாமிபுரத்தில் சனிக்கிழமை விஜய் பங்கேற்ற தவெக தவெக பிரசார கூட்டத்துக்கு சென்றனா். அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூவரும் உயிரிழந்தனா்.
முன்னதாக, அவா்கள் வீட்டில் இருந்து புறப்படும்போது ஹேமலதாவின் கணவா், மூவரையும் பிரசாரத்தை பாா்க்கச் செல்ல வேண்டாம் எனக் கூறினாராம். ஆனால் விஜய் மீது பற்றுக்கொண்ட ஹேமலதா மற்றும் அவரது குழந்தைகள் அவரை காண்பதற்காக சென்ற இடத்தில் உயிரிழந்த சம்பவம் அவா்கள் குடியிருக்கும் இடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.