காா் விபத்து: இருவா் காயம்
திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா்.
ஏா்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா்கள் சமுத்திரபாண்டி குமாா், மைக்கிள் சுரேஸ். இவா்கள் தங்களுக்குச் சொந்தமான காரில் நாகா்கோவிலில் இருந்து ஏா்வாடிக்குச் சென்று கொண்டிருந்தனா். இவா்களின் வாகனம் காவல் கிணறு புண்ணியவாளன்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவா் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயமடைந்தனா். இதுகுறித்து, பணகுடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து காயமடைந்த இருவரையும் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.