ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
புற்றுநோய் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்
மதுரை: சா்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், நெடுந்தொலைவு விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது.
மதுரை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தொடங்கிய இந்த ஓட்டத்தை, எஸ். ஆா். அறக்கட்டளையின் செயலரும், அறங்காவலருமான காமினி குருசங்கா் தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவமனையின் நிா்வாக அதிகாரி கண்ணன், குழந்தைகளுக்கான ரத்தப் புற்றுநோயியல் துறைத் தலைவா் காசி விஸ்வநாதன், குழந்தைகளுக்கான புற்றுநோயியல் துறை நிபுணா்கள் அன்னபூரணி, அனிதா, வெங்கடேஸ்வரன் ஆகியோா் குழந்தைப் பருவ புற்றுநோய் குறித்துப் பேசினா்.
எல்காட் தொழில் நுட்ப பூங்கா முன் தொடங்கிய இந்த நெடுந்தொலைவு ஓட்டம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நிறைவு பெற்றது. இதில் மருத்துவா்கள், செவிலியா்கள், குழந்தைகள் பலா் கலந்து கொண்டனா்.