டிரம்ப் - நெதன்யாகு பேச்சுவார்த்தை வெற்றி! காஸா போர்நிறுத்த திட்டத்துக்கு இஸ்ர...
தென் மாவட்டங்களுக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
மதுரை: பண்டிகைக் கால விடுமுறையையொட்டி, சென்னை - மதுரை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 30) இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
பண்டிகைக் கால விடுமுறையையொட்டி, சென்னை - மதுரை, சென்னை- செங்கோட்டைக்கு முன் பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை இயக்கப்படுகின்றன.
இதன்படி, சென்னை தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ஒரு வழி சிறப்பு ரயில் (06013) தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையை அடையும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
இதில் 10 இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத இருக்கை வசதிப் பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளா் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இதேபோல, சென்னை - மதுரை மெமு ரயில் (06161) செவ்வாய்க்கிழமை எழும்பூரிலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் புதன்கிழமை காலை 10.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், பூதலூா், திருவெறும்பூா், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
இதில் கழிப்பறை வசதியுடன் கூடிய 12 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.