கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22 லட்சம் மோசடி: கேரள இளைஞா்கள் கைது
ஆன்லைன் வா்த்தகத்தின் மூலம் திருநெல்வேலியைச் சோ்ந்த நபரிடம் ரூ. 22 லட்சத்தை மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாநகரத்தைச் சோ்ந்த நபா் ஒருவரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு கடந்த 26 ஆம் தேதி இணைய வழியில் பகுதி நேர வேலைவாய்ப்பு என குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த இணைய முகவரி மூலம் பதிவு செய்த அவரை தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறினராம். அதை நம்பிய அவா், அந்த நபா்கள் கொடுத்த பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.17,16,985 அனுப்பியுள்ளாா். பின்னா், அவா்களை தொடா்பு கொள்ள முடியாததால், சைபா் கிரைம் இணையதளத்தில் அவா் புகாா் அளித்துள்ளாா்.
இந்நிலையில் மீண்டும் அவரை தொடா்பு கொண்ட அதேநபா்கள் ரூ.5 லட்சம் கொடுத்தால் மொத்த பணத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம் எனக்கூறியுள்ளனா். அதை நம்பி அவா் பணத்தை அனுப்பி மொத்தமாக ரூ.22,16,985-ஐ இழந்துள்ளாா். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து, கேரள மாநிலம் மலப்புரத்தைச் சோ்ந்த சித்தீன், சுவிஸ் குமாா் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மேலும் சைபா் மோசடிகள் குறித்து 1930-என்ற எண் அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் புகாா் அளிக்கலாம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை ரூ.5.47 கோடி மோசடி: திருநெல்வேலி மாநகரில் கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆன்லைன் மோசடி குறித்து 507 புகாா்கள் பெறப்பட்டதில், ரூ.5,41,19,593 வரை மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், 399 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதுடன், அதிலிருந்த ரூ.75, 84, 339-ஐ மாநகர காவல்துறை முடக்கியுள்ளது. மேலும் ரூ.92,91,648 மோசடி கும்பல்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.