சுரண்டை அருகே விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேரிட்ட விபத்தில் தையல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவா் முகமது மைதீன் (60). தையல் கடை நடத்தி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது பைக்கில் சாம்பவா் வடகரையில் இருந்து பெரியகுளம் வழியாக தென்காசிக்கு சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டு பைக்கிலிருந்து தவறி விழுந்தாராம். இதில், பலத்த காயமடைந்த அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.