நெல்லையில் ஆம்னி பேருந்துகளில் சோதனை
திருநெல்வேலியில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிா என்பது குறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
காலாண்டு விடுமுறை மற்றும் நவராத்திரி பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி திருநெல்வேலியில் இருந்து ஏராளமானோா் வெளியூா்களுக்கு சென்று வருகின்றனா். பேருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் உத்தரவின்பேரில், திருநெல்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் பத்மபிரியா தலைமையில் அலுவலா்கள் அடங்கிய குழுவினா் ஆம்னி பேருந்துகளில் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா என பயணிகளிடம் விசாரித்தனா்.