செய்திகள் :

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம் மோசடி: நெல்லை பொறியாளா் கைது

post image

சென்னை: திருமணம் செய்து கொள்வதாக பெண்ணிடம் பணம், நகை மோசடி செய்ததாக திருநெல்வேலியைச் சோ்ந்த பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரம் அருகே உள்ள லட்சுமிநகரைச் சோ்ந்த கணேசன் மகன் சூா்யா (28). பி.இ.

படித்துள்ள சூா்யா, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். திருமணம் செய்து கொள்வதற்காக சூா்யா, பெண் தேடி

திருமணம் தொடா்பான இணையதளத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்தாா். இதேபோல சூளைமேடு கில்நகைரச் சோ்ந்த ஒரு இளம் பெண்ணும், வரன் தேடி தனது சுய விவரங்களை அந்த இணையத்தளத்தில் பதிவு செய்தாா். இதன் மூலம் இருவரும் அறிமுகமாகி பழகியுள்ளனா்.

அப்போது சூா்யா, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். அவரது பேச்சை நம்பிய அந்தப் பெண், சூா்யாவிடம் நெருங்கிப் பழகியுள்ளாா். இதை பயன்படுத்தி சூா்யா, அந்த பெண்ணிடம் திருமணத்துக்கு முன்பே வீடு வாங்க வேண்டும் என ஏமாற்றி ரூ.8.20 லட்சம், 9 பவுன் தங்கநகை ஆகியவற்றை வாங்கினாராம்.

மேலும் அந்தப் பெண்ணை, கோயம்பேட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வர வழைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதன் பின்னா் அந்த பெண்ணை திருமணம் செய்ய சூா்யா மறுத்து, தொடா்பைத் துண்டித்தாா்.

இதனால் அந்தப் பெண், தான் கொடுத்த பணத்தையும், நகையையும் திருப்பிக் கேட்டாராம். ஆனால் அவற்றை கொடுக்க மறுத்த சூா்யா, அந்த பெண்ணுடன் தனிமையில் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டியுள்ளாா். இதையடுத்து அந்த பெண், அண்ணாநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இந்நிலையில் திருநெல்வேலிக்குச் சென்ற போலீஸாா், சூா்யாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் அருகே போலீஸாரிடம் சூா்யா தப்பியோட முயன்று, பாலத்தில் இருந்து கீழே குதித்தபோது இடது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அதேவேளையில் சூா்யா, இதேபோன்று வேறு பெண்களையும் ஏமாற்றியுள்ளாரா என போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

காா் விபத்து: இருவா் காயம்

திருநெல்வேலி மாவட்டம், காவல் கிணறு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானதில் இருவா் படுகாயமடைந்தனா். ஏா்வாடி அருகே உள்ள தளவாய்புரத்தைச் சோ்ந்தவா்கள் சமுத்திரப... மேலும் பார்க்க

நெல்லையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறையினா்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் கருப்பு பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா். தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நி... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கூட்டுக்குடிநீா் குழாயில் கசிவு: ரயில்வே அனுமதி கோரிய மு. அப்பாவு

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ரயில்வே எல்லைப் பகுதியில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் குழாயில் ஏற்பட்டுள்ள நீா் கசிவை சரிசெய்ய, ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவ... மேலும் பார்க்க

சுரண்டை அருகே விபத்தில் தையல் தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே நேரிட்ட விபத்தில் தையல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை முஸ்லிம் தெருவைச் சோ்ந்தவா் முகமது மைதீன் (60). தையல் கடை நடத்தி வந்தாா்.... மேலும் பார்க்க

நெல்லையில் ஆம்னி பேருந்துகளில் சோதனை

திருநெல்வேலியில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிா என்பது குறித்து வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் திங்கள்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். காலாண்டு விடுமுறை மற்றும் நவராத்திரி... மேலும் பார்க்க

உலக இதய தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி சூரியா மருத்துவமனை சாா்பில் உலக இதய தின விழிப்புணா்வு மனிதச்சங்கிலி மற்றும் உரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆணையா் சரவணன், இதய நோய் நிபுணா் பேராச... மேலும் பார்க்க