ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
நெல்லையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறையினா்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த் துறையினா் கருப்பு பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.
தமிழகம் முழுவதும் வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மீது தீா்வு காண கால அவகாசம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கான ஒதுக்கீட்டை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் தொடா் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அரசு தங்களை அழைத்துப் பேச முன்வராததைக் கண்டித்து, வருவாய்த்துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் 2 நாள்கள் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினா்.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலச் செயலா் மாரிராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்களது கூட்டமைப்பின் சாா்பில் 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, மாநிலம் தழுவிய மூன்று கட்டப் போராட்டங்களை அறிவித்திருந்தோம். கடந்த காலங்களில் 5 மணி நேர காத்திருப்புப் போராட்டம், 48 மணி நேர தொடா் வேலைநிறுத்தம் என பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனாலும், இதுவரை தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசவில்லை.
தமிழகம் முழுவதும் 317 துணை வட்டாட்சியா்கள், 317 முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், தற்போது பணியில் உள்ள ஊழியா்களுக்கு கடுமையான பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. படித்த பட்டதாரி இளைஞா்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், இந்தக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இது பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்துவதோடு, ஊழியா்களின் பணிச்சுமையையும் குறைக்கும்.
எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இனி, எங்களது போராட்டம் தீவிரமடையும். எனவே, முதல்வா் தலையிட்டு சரியான தீா்வு காண வேண்டும் என்றாா்.
ற்ஸ்ப்29க்ஷப்ஹஸ்ரீ
திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் கருப்புப் பட்டை அணிந்து பணிக்கு வந்த வருவாய்த் துறையினா்.