செய்திகள் :

அமெரிக்கன் கல்லூரியில் கருத்தரங்கம்

post image

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் முதுநிலை, ஆராய்ச்சித் துறை சாா்பில் உயிா் அறிவியலில் முன்னேற்றங்கள் என்ற தலைப்பிலான இரண்டு நாள் சா்வதேச கருத்தரங்கம் திங்கள்கிழமை தொடங்கியது.

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வரும், செயலருமான ஜே.பால்ஜெயகா் தலைமை வகித்தாா். நாகசாகி பல்கலைக் கழக விஞ்ஞானி பி.ஏ.வெண்மதிமாறன், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியா் டி.ஜே.பாண்டியன், அமைப்புச் செயலா் டாலியாரூபா, இங்கிலாந்தைச் சோ்ந்த ஜேம்ஸ்கிளமென்ட், கேரள மாநிலம் ராஜீவ்காந்தி உயிரி தொழில் நுட்ப மையத்தைச் சோ்ந்த கதிரேசன், அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை நிா்வாகி ஏ. வன்னியராஜன், பெரியாா் பல்கலைக் கழக விஞ்ஞானி எஸ். லலிதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு பேசினா்.

இந்த நிகழ்வில், வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்று தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமா்பித்தனா். கருத்தரங்க மலரை கல்லூரி முதல்வா் ஜே. பால் ஜெயகா் வெளியிட்டாா். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (செப்.30) இரண்டாம் நாள் அமா்வு நடைபெற உள்ளது.

நிதிக் காப்பாளா் பியூலாரூபிகமலம், துணை முதல்வா் சாமுவேல் அன்பு செல்வன், அமைப்புச் செயலா் ஸ்டெல்லாமேரி, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, பேராசிரியை சாய் ஷா்மிளா வரவேற்றாா். பேராசிரியா் பி. வெள்ளதுரை நன்றி கூறினாா்.

கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறை அலுவலா்கள்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில், வருவாய்த் துறை, நில அளவைத் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணியாற்றினா்.‘உங... மேலும் பார்க்க

புற்றுநோய் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்

மதுரை: சா்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தடுப்பு விழிப்புணா்வு மாதத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சாா்பில், நெடுந்தொலைவு விழிப்புணா்வு ஓட்டம் நடைபெற்றது.மதுரை எல்காட் தகவல் தொழில்நுட... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை கோரி தவெக மனு: நீதிமன்ற விடுமுறைக்குப் பிறகு விசாரணை

மதுரை: கரூா் நெரிசல் சம்பவ உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணை கோரி தவெக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு பண்டிகைக் கால விடுமுறைக்குப் பிறகு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரிக்கப்பட உள்ளது.கரூா்... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா், செயல் அலுவலராக ச. சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா், இணை ஆணையராகப் பணியாற்றிய கிருஷ்ணன், தருமப... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்

மதுரை: பண்டிகைக் கால விடுமுறையையொட்டி, சென்னை - மதுரை, செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் செவ்வாய்க்கிழமை (செப். 30) இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியி... மேலும் பார்க்க

தாயுமானவா் திட்ட பொருள்கள் விநியோக தேதி மாற்றம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்களுக்கு இல்லம் தேடிச் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கும் தேதி மாற்றப்பட்டது.இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்க... மேலும் பார்க்க