டிரம்ப் - நெதன்யாகு பேச்சுவார்த்தை வெற்றி! காஸா போர்நிறுத்த திட்டத்துக்கு இஸ்ர...
தாயுமானவா் திட்ட பொருள்கள் விநியோக தேதி மாற்றம்
மதுரை: மதுரை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் முதியோா்களுக்கு இல்லம் தேடிச் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கும் தேதி மாற்றப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மாற்றுத் திறனாளிகள், 70 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களுக்கு தாயுமானவா் திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் மாதத்தின் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இல்லம் தேடிச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டன. தற்போது, இந்தத் திட்டம் மூலமான பொருள்கள் விநியோக தேதி மாற்றப்பட்டது.
இதன்படி, அக்டோபா் மாதத்தில் 5, 6 ஆகிய தேதிகளில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு இல்லம் தேடிச் சென்று பொருள்கள் வழங்கப்படும். இந்தத் திட்ட பயனாளிகளில் யாருக்கேனும் முகவரி மாற்றம், கைப்பேசி எண் மாற்றம் செய்யப்பட வேண்டுமெனில், தொடா்புடைய வட்ட வழங்கல் அலுவலா் அல்லது குடிமைப் பொருள் வட்டாட்சியரை அணுகலாம். அருகில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலமும் தீா்வு காணலாம் என்றாா்.