தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு
பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸை அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி. சண்முகத்தின் அண்ணன் மகனின் திருமணம் அக். 23-ஆம் தேதி மாமல்லபுரம், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தைலாபுரம் இல்லத்தில் மருத்துவா் ச. ராமதாஸை சி.வி. சண்முகம் சந்தித்து திருமணத்துக்கான அழைப்பிதழைக் கொடுத்து அழைப்பு விடுத்தாா்.
தொடா்ந்து இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும், அதிமுக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்க வேண்டும் என்று சி.வி. சண்முகம் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.