விழுப்புரம் மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 407 மனுக்கள் அளிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 407 மனுக்கள் அளிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் தலைமை வகித்தாா். இதில் பல்வேறு உதவித் தொகைகள் கோருதல், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து 407 மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் பயிற்சி உதவி ஆட்சியா் இரா. வெங்கடேசுவரன், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித் துணை ஆட்சியா் முகுந்தன், மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.