செய்திகள் :

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக மூவா் கைது: 22 போ் மீது வழக்கு

post image

சென்னை: கரூா் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக, 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 22 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், கரூரில் கடந்த சனிக்கிழமை பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சமூக ஊடகங்களில் ஏராளமான விடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகளும் வேகமாக பரவி வருகிறது.

இதில் சில உண்மைக்கு மாறான விடியோக்களும், புகைப்படங்களும் பொதுமக்களிடம் வதந்தியை பரப்பும் வகையில் ஊடகங்களில் பரப்பப்படுவதாக புகாா் கூறப்பட்டது.

இதையறிந்த முதல்வா் மு.க ஸ்டாலின், சமூக ஊடகங்களில் வதந்தி மற்றும் பொய் செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில் கரூா் சம்பவம் சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்பும் வகையில் 25 சமூக ஊடக கணக்காளா்கள் மீது சென்னை காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த நிா்வாகி சென்னை அருகே உள்ள மாங்காட்டைச் சோ்ந்த சிவனேசன் (36), ஆவடியைச் சோ்ந்த சரத்குமாா் (32), பாஜக நிா்வாகி சகாயம் (38) ஆகிய 3 பேரை உடனடியாக கைது செய்தனா். மேலும் பலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காவல் ஆணையா் எச்சரிக்கை: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘கரூா் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சமூக ஊடகங்களில் சிலா் பரப்பும் பொய்ச் செய்திகள், பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் தவறான,பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் . மீறி பொய்யான தகவல்களை பதிவிடும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளாா்.

காலமானார் ஞானத்தாய்

அம்பாசமுத்திரம் தினமணி செய்தியாளர் அழகியநம்பியின் தாயார் காலமானார்.ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் பேராசிரியர் மு.செ. குமாரசாமி (அறிவரசன்) துணைவியார் ஞானத்தாய் (84) வயது மூப்பு காரணமா... மேலும் பார்க்க

கரூர் பலி: புஸ்ஸி ஆனந்த் தலைமறைவு?

கரூர் நெரிசல் பலிகளைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்... மேலும் பார்க்க

இனி விஜய்யின் பேச்சு தொடருமா?

கரூர் சம்பவத்தால் விஜய்யின் அடுத்தடுத்த பரப்புரைகள் கேள்விக்குள்ளாகியுள்ளன. நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 39 பேர... மேலும் பார்க்க

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகரும் அபிஷேக் சர்மா!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான போட... மேலும் பார்க்க

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார்!

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் பின்நவீனத்துவ இலக்கிய ஆக்கங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் இன்று ... மேலும் பார்க்க

சீமான் பேச்சு அநாகரிகத்தின் உச்சம்: திமுக கண்டனம்

பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். போன்றவர்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தரந்தாழ்த்து வாய்த்துடுக்காகப் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம் என திமுக மாணவரணி செயலாளர் ராஜ... மேலும் பார்க்க