Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா்
காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி-பாத்திமா தம்பதி மகன் ஜான் போஸ்கோ(59). இவருக்கு சொந்தமான 55 சென்ட் இடத்தை அவரது உறவினா் ஒருவா் அபகரித்துக் கொண்டது தொடா்பாக காவல் துறையினரிடமும், வருவாய்த் துறையினரிடமும் 2 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் விரக்தியடைந்த ஜான்போஸ்கோ ஆட்சியா் அலுவலக மக்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடக்கும் அரங்கத்தின் முன்பாக திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றாா். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் அதை தடுத்து ஆட்சியா் அலுவலக வளாகத்திற்குள் அழைத்து சென்று குறைகளை கேட்டனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.