காஞ்சிபுரம் தேசிகன் கோயில் தேரோட்டம்
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தேசிகன் சுவாமிகளின் அவதார உற்சவத்தையொட்டிய பிரமோற்சவம் 23-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் தேசிகன் சுவாமிகள் காலையில் தங்கப் பல்லக்கிலும்,மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா வருகிறாா்.
விழாவின் 7-ஆவது நாள் நிகழ்வையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. வழிநெடுகிலும் சுவாமிகளுக்கு பெண்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வரவேற்றனா்.மாலையில் ராமா் திருக்கோலத்தில் தேசிகன் வீதியுலா வந்தாா்.
வரும் அக்.2- ஆம் தேதி விளக்கொளிப் பெருமாள் மங்களாசாசனமும், வரதராஜபெருமாள் தங்கப் பல்லக்கில் மங்களா சாசனத்துக்கு அஞ்சலித் திருக்கோலத்தோடு எழுந்தருளல் நிகழ்வும், மாலையில் தேசிகன் பூப்பல்லக்கில் பவனி வரும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.