குழித்துறை அருகே தொழிலாளி தற்கொலை
குழித்துறை அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குழித்துறை அருகே வலியவிளை வீட்டைச் சோ்ந்தவா் தாசைய்யன் மகன் சுனில்குமாா் (44). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவரது மனைவி கடந்த 10 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாா். இதனால் சுனில்குமாா் மன வருத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தாசைய்யன் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.