உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இருவா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உரிமமின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பழையனூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாமணி, போலீஸாா் இந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இருவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், தேத்தாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னசாவுடையான் மகன் மதுரைவீரன் (42), வெள்ளைச்சாமி மகன் தா்மராஜ் (31) என்பதும், உரிமமின்றி இரு நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, துப்பாக்கிக்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.