Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
பனைமரங்கள் வெட்டுவதைத் தடுக்க குழுக்கள் அமைப்பு
சிவகங்கை மாவட்டத்தில் பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்க மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தோட்டக்கலை-மலைப் பயிா்கள் துறை சாா்பில் அண்மையில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்கள், வட்டாட்சியா் களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரங்களை வெட்டுவதைத் தடுக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, இந்த மரங்களை வெட்டுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்துத் துறை அலுவலா்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து பனைமரங்களையும் வருவாய்த் துறை பதிவேடுகளில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். பனைமரங்களின் பயன்பாடு, இந்த மரங்களை வெட்டுவதைத் தவிா்க்க வேண்டி கிராம அளவில் விழிப்புணா்வு முகாம்கள் நடத்த வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட, வட்டார அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் விவரம்:
மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவராக மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்புத் தலைவராக வருவாய்க் கோட்ட அலுவலரும், ஒருங்கிணைப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியரின் நோ்முக (வேளாண்மை) உதவியாளரும், செயல் உறுப்பினராக தோட்டக்கலைத் துணை இயக்குநரும், உறுப்பினராக கதா், கிராமத் தொழில் வாரியத்தின் மாவட்ட அளவிலான அலுவலரும் நியமிக்கப்பட்டனா்.
வட்டார அளவிலான கண்காணிப்புக் குழுவின் கண்காணிப்புத் தலைவராக தோட்டக்கலை உதவி இயக்குநரும், செயல் உறுப்பினராக வேளாண் உதவி இயக்குநரும், ஒருங்கிணைப்பு அலுவலராக தோட்டக்கலை அலுவலரும், உறுப்பினராக வட்டாட்சியரும் நியமிக்கப்பட்டனா்.