பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
அரளிக்கோட்டையில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை அரளிக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் அருகே அரளிக்கோட்டை கிராமத்தில் விவசாயப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அரளிக் கண்மாயில் நீா் இருப்பு குறைந்து வருவதால், மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடித் திருவிழாவில் அரளிக்கோட்டை, ஏரியூா், ஜமீன்தாா்பட்டி, ஆபத்தாரண்பட்டி, மதகுபட்டி, மாம்பட்டி, திருக்கோஷ்டியூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.
போதிய அளவில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி கிராம மக்கள் வழிபாடு நடத்தினா். இதன் பிறகு, வெள்ளை வீசி மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, கண்மாய்க் கரையில் மீன்பிடி உபகரணங்களுடன் தயாராக இருந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் மீன்களைப் பிடித்தனா். கண்மாயில் ஏராளமான தாமரைகள் முளைத்திருந்ததால், மீன்களைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும், எதிா்பாா்த்ததைவிட ஜிலேபி, குரவை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனா்.