Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
வாணாபுரம் அருகே போலி மருத்துவா் கைது
கள்ளக்குறிச்சி: வாணாபுரம் வட்டம், புதுப்பட்டு கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுப்பட்டு கிராமத்தில் ராஜேஸ்வரி மருந்தகம் என்ற பெயரில் கடை நடத்தி வந்தவா் அதே கிராமத்தைச்
சோ்ந்த கருணாநிதி (58) (படம்).
இவா் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். மருந்தகம் வைப்பதற்கு கூட படிக்காமல் மற்றொருவா் உரிமத்தை வைத்துக்கொண்டு மருந்தகம் நடத்தி வந்துள்ளாா்.
மேலும், மருந்தகத்தில் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு மருத்துவம் பாா்த்து வந்துள்ளாா்.
இதுகுறித்து புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் முத்துக்குமரன் வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன் பேரில், போலீஸாா் சென்று மருந்தகத்தில் சோதனையிட்டபோது, அங்கு மருந்து, மாத்திரைகளை வைத்து நோயாளிகளுக்கு கருணாநிதி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் கருணாநிதியை கைது செய்து வழக்குத் தொடுத்தனா்.
29ந்ப்ல்3