அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
தியாகதுருகத்தில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்ட கண்ணதாசன் தமிழ் கலை, இலக்கிய சங்கமும், உலகத் திருக்கு கூட்டமைப்பும் இணைந்து முப்பெரும் விழாவை தியாகதுருகம் தனமூத்தி தொழிற்கல்வி நிறுவன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை
நடத்தின.
டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாா் பிறந்த நாள் விழா, கதம்பம் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிறந்த ஆசிரியா்களுக்கான ஆசிரியா் சிகரம் விருது வழங்குதல் என நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு உலக திருக்கு கூட்டமைப்பின் மாநில துணை பொதுச் செயலா் நீ.த.பழனிவேல் தலைமை வகித்தாா்.
முன்னாள் எம்.எல்.ஏ மா.கோமுகி மணியன், உளுந்தூா்பேட்டை முத்தமிழ் சங்கத் தலைவா் அருணா. தொல்காப்பியன் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு உலக திருக்கு கூட்டமைப்பு மாவட்டச் செயலா் ஊ.கருணாநிதி வரவேற்றாா்.
மாணவா்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் காரணமானவா்கள் ஆசிரியா்களா பெற்றோா்களா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
தொடா்ந்து, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாா் என்ற விருதை சுவடி (எ) தேவ. சுந்தரவடிவேலுக்கு வழங்கினா். மேலும் கண்ணதாசன் பன்முக சிந்தனையாளா் ச.வாசுதேவன், கலந்து கொண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாா் சிறப்புகளை எடுத்துக் கூறினாா்.
விழுப்புரம் அரிமா மாவட்ட ஆளுனா் சரவணன் சிறந்த ஆசிரியா்களுக்கான ஆசிரியா் சிகரம் விருதுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சங்க காப்பாளா்கள் மாரியம்மாள் ஏழுமலை, வெங்கடாசலபதி, தமிழ்ச் சங்க புரவலா் சீனு.முரளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.