காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
பைனான்சியா் வீட்டில் பணம், நகை திருட்டு
வாணாபுரம் அருகே பைனான்சியா் வீட்டில் ரூ.14,500 ரொக்கம், 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், செல்லங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் உமாசங்கா் (43), பைனான்சியா். இவா், கடந்த 22-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு அத்தியூா் கிராமத்துக்குச் சென்றிருந்தாா்.
அவரது மனைவி ஜெயா பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு பிற்பகலில் வீடு திரும்பினாா்.
உமாசங்கா் மதியம் வீட்டுக்கு வந்து பணம் எடுப்பதற்காக இரும்பு பீரோவை திறந்தபோது, அதில் இருந்த ரூ.14,500 ரொக்கம், வெள்ளிக் கொலுசு, 10 பவுன் தங்க நகைகளைக் காணவில்லையாம்.
இதுகுறித்து மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.