மின் கம்பம் முறிந்து விழுந்து ஊழியா் உயிரிழப்பு
சின்னசேலம் அருகே மின் கம்பம் முறிந்து விழுந்ததில் தற்காலிக மின் ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், கோட்டக்கரை பகுதியில் சிதலமடைந்த மின் கம்பத்தை அகற்றி மற்றொரு கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்பணியில் தற்காலிக ஊழியரான சின்னசேலத்தை அடுத்த தெங்கியாநத்தம் விளைநிலப் பகுதியில் வசித்து வந்த தங்கராசு மகன் மாதவன் (25) ஈடுபட்டிருந்தாா்.
அப்போது மின் கம்பம் முறிந்து மாதவன் மேல் விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.