பிரசார கூட்டத்தில் மின்சாரத்தை துண்டித்தது யார்? திமுக மீது வீண் பழி சுமத்துகிறத...
அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் செய்யும் இடங்களை வரையறை செய்வது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆா்ப்பாட்டங்கள், கண்டன ஆா்ப்பாட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசாரங்கள் நடத்துவதற்கு நகராட்சிகள், பேரூராட்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து இடையூறு ஏற்படும் இடங்கள் ஆகியவற்றைத் தவிா்த்து தோ்வு செய்யப்பட்ட இடங்களின் விவரம் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது.
தோ்வு செய்யப்பட்ட இடங்கள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனா்.
வரையறுக்கப்பட்ட இடங்களில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்ட இடங்கள் மற்றும் சில இடங்களுக்குப் பதிலாக மாற்று இடங்கள் குறித்து கருத்து தெரிவித்தனா்.
மாற்று இடங்கள் குறித்து கள ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிக்காத வகையில் அனைத்துக் கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளித்து, நிகழ்ச்சிகளை
மேற்கொள்ள வேண்டுமென ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட எஸ்பி க.ச.மாதவன், வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் துணை ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மா.தனலட்சுமி, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.