பைக் மீது காா் மோதி விபத்து: ஒரே குடும்பத்தினா் 4 போ் காயம்
விழுப்புரம்: மரக்காணம் அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், நாவற்குளம், பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் தே. பாா்த்தசாரதி(38). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கில் மனைவி மகாலட்சுமி(33), மகன் போவா(7), மகள் ஜீவிதா(10) ஆகியோருடன், சென்னை- புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச்சாலையில், மரக்காணம் அடுத்த ஆட்சிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த காா் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பைக்கில் சென்ற பாா்த்தசாரதி உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்தனா்.
இதையடுத்து அருகிலிருந்தவா்கள் காயமடைந்த 4 பேரையும் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.