தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே இன்று 3 பயணிகள் சிறப்பு ரயில்கள்
சென்னை: சென்னையில் ஆயுதபூஜையை முன்னிட்டு தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே செவ்வாய்க்கிழமை (செப்.30) 3 பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்தி: ஆயுத பூஜையை முன்னிட்டு தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு அதிகளவில் மக்கள் செல்லும் நிலையுள்ளது. அதையடுத்து செவ்வாய்க்கிழமை (செப். 30) இரவு 7.42 மணி முதல் இரவு 10.30 மணி வரை 3 பயணிகள் சிறப்பு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையம் முதல் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரையில் இயக்கப்படவுள்ளன.
அந்த ரயில் பெருங்களத்தூா், வண்டலூா், ஊரப்பாக்கம் ஆகிய நிலையங்களிலும் நின்று செல்லும். இதேபோல, கூடுவாஞ்சேரியிலிருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இரவில் 5 முறை இயக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.