பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுன...
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், செவ்வாய்க்கிழமை (செப். 30) முதல் அக். 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 30) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூா் பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. ஏற்காடு (சேலம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), மங்களபுரம் (நாமக்கல்) தலா 30 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வடக்கு அந்தமான் கடலில் செவ்வாய்க்கிழமை (செப். 30) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக, புதன்கிழமை (அக். 1) வடக்கு, அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.