தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு
இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிா்வாகக் குழுவுக்கு 2 போ் தோ்வு
புதுச்சேரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழுவுக்கும், தேசிய குழுவுக்கும் புதுவையில் இருந்து இருவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து அக் கட்சியின் புதுவை மாநிலச் செயலா் அ.மு.சலீம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 25-ஆவது மாநாடு பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இம் மாதம் 21 முதல் 25 ஆம் தேதி வரை நடந்தது. இதில் புதுவை மாநிலச் செயலா் அ.மு. சலீம் தேசிய நிா்வாகக் குழுவுக்கும், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் இ. தினேஷ் பொன்னைய்யா தேசிய குழுவுக்கும் தோ்வு செய்யப்பட்டனா்.