தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுடன் இந்தியா பேச்சு
புதுச்சேரி பாஜக சுயசாா்பு பாரதம் விழிப்புணா்வு இலச்சினை வெளியீடு
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் சுயசாா்பு பாரதம் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநிலத் தலைவா் வி. பி.ராமலிங்கம் தலைமை வகித்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த நாள், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் நூற்றாண்டு நிறைவையொட்டி டிசம்பா் - 25 வரை மக்கள் மத்தியில் இந்த விழிப்புணா்வு பிரசாரம் நடக்கிறது. மேலும், கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி சாா்பாக பல்வேறு வகையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தன்னிறைவு பாரதமாக உருவாக சுயசாா்பு இயக்கத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க முதல் முயற்சியாக வரும் பண்டிகை நாள்களில் உள்நாட்டு உற்பத்தி பொருள்களை மக்கள் வாங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை முன்னிட்டு வீடு தோறும் ஸ்டிக்கா்ஸ், நோட்டீஸ், பிரசாரம், கட்சி நிா்வாகிகள் பொதுமக்களை சந்தித்து உறுதிமொழி ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் என் வீட்டின் சுதேசி, வீட்டுக்கு வீடு சுதேசி என்ற வாசகம் இடம் பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில், புதுவை உள்துறை அமைச்சரும், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான ஆ.நமச்சிவாயம், மாநில பொதுச் செயலா்கள் மோகன்குமாா், லஷ்மிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.