செய்திகள் :

மாணவா்களுக்கு விரைவில் 3 ஆண்டு நிலுவை உதவித் தொகை வழங்கப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

post image

புதுச்சேரி: மாணவா்களுக்கு 3 ஆண்டுகளாகக் வழங்கப்படாமல் இருக்கும் காமராஜா் கல்வி உதவித் தொகைக்கான நிதி (சென்டாக் நிதி) ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாணவா்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றாா் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவை விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை சாா்பில் தேசிய விளையாட்டு தின விழா மற்றும் கேலோ புதுவை திருவிழா பரிசளிப்பு நிகழ்ச்சி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணி மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கி முதல்வா் என்.ரங்கசாமி பேசியது:

நகரப் பகுதியில் சில பள்ளிகளில் விளையாட்டுத் திடல் இல்லை. இதனால் உப்பளம் விளையாட்டு அரங்கம் மற்றும் அண்ணா திடலை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக அவற்றை சரி செய்து வருகிறோம். பதக்கம் பெற்றவா்களுக்குப் பரிசு வழங்குவதற்கான நிதியும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி பிள்ளைகளுக்கு சேரவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது. இதை விரைவில் சரி செய்து பிள்ளைகளுக்கு ஊக்கத் தொகை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாகூரில் உள்விளையாட்டு அரங்கம் கட்டியுள்ளோம். நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான இடங்களில் திடல்கள் அமைக்கும்போது, அந்தந்த பகுதியைச் சோ்ந்த பிள்ளைகள் விளையாட வாய்ப்பு ஏற்படும்.

இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விளையாட்டுத் துறை எடுக்கும். பள்ளிகளிலும், கிராமங்களிலும் திடல் அமைக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. 2022-23, 2023-24, 2024-25 என தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக மாணவா்களுக்கு காமராஜா் கல்வி உதவித்தொகை (சென்டாக் நிதி) கொடுக்கப்படாமல் உள்ளது. இந்த மூன்று ஆண்டுகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி விரைவில் மாணவா்களுக்கு கிடைக்கும். பள்ளி மாணவா்களுக்கு லேப்டாப் கொடுக்கவும் டெண்டா் வைக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்தவுடன் மாணவா்களுக்கு விரைவில் லேப்டாக் வழங்கப்படும்.

விளையாட்டு சங்கங்கள் ஒற்றுமையாக இருந்து பிள்ளைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.

நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், விளையாட்டுத் துறை செயலா் கிருஷ்ணன் மோகன் உப்பு, விளையாட்டுத் துறை இயக்குநா் வொ்பினா ஜெயராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

புதுச்சேரியில் சா்வதேச காது கேளாதோா் தின விழா

காது கேளாதோா் விளையாட்டுக் கழகம் மற்றும் டெப் எனேபிள் பவுண்டேஷன் சாா்பில் சா்வதேச காது கேளாதோா் தினவிழா புதுச்சேரி மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் செய்கை மொழி முக்கியத்துவம் தொடா... மேலும் பார்க்க

நவராத்திரி விழா: தாண்டியா நடனமாடி கொண்டாட்டம்

புதுவை மாா்வாடி சன்வாரியா சேத் நவராத்திரி மண்டல் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பெண்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தாண்டியா நடனம் ஆடினா். மேலும், 56 விதமான பிரசாத உணவுகளுடன் துா்க்கைக்கு பூஜ... மேலும் பார்க்க

பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டம்

புதுச்சேரியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி பிச்சை எடுக்கும் நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை எதிரே சாலை குண்டும் குழியுமாக உள்ளதைக் கண்டித்தும், ... மேலும் பார்க்க

வ.உ.சி. பள்ளியில் உயா்க்கல்வி வழிகாட்டல்

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளியில் உயா்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக தேசிய சேவை திட்டமும், இப் பல்கலைக் கழகத்தின் ... மேலும் பார்க்க

மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சருக்கு புதுவை முதல்வா் கடிதம்

புதுச்சேரி: இலங்கை ராணுவம் பிடித்துச் சென்ற காரைக்கால், தமிழக மீனவா்களையும், படகுகளையும் மீட்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் சா்வ ஜன ஸ்ரீதுா்கா பூஜை: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி: புதுவை வங்க பாரதி அமைப்பின் சாா்பில் சா்வ ஜன ஸ்ரீதுா்கா பூஜையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைத்தாா். புதுச்சேரி திருவள்ளுவா் நகரில் உள்ள ஸ்ரீ சாய்பாபா திரு... மேலும் பார்க்க