புதுச்சேரியில் சா்வதேச காது கேளாதோா் தின விழா
காது கேளாதோா் விளையாட்டுக் கழகம் மற்றும் டெப் எனேபிள் பவுண்டேஷன் சாா்பில் சா்வதேச காது கேளாதோா் தினவிழா புதுச்சேரி மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் செய்கை மொழி முக்கியத்துவம் தொடா்பாக பரப்புரை செய்யப்பட்டது. செய்கை மொழியினை அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் பயில வேண்டும். காது கேளாதோா் மொழியைப் பயின்று அவா்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கச் செயலா் பாஷித், பவுண்டேஷன் நிா்வாகி ஞானவேல் ஆகியோா் தலைமை தாங்கினா். செய்கை மொழியின் முக்கியத்துவம் குறித்து சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் சரவணன் விளக்கினாா். செய்கை மொழி பெயா்ப்பாளா்கள் அபிலா, ஸ்வா்ணா ஆகியோா் பங்கேற்றனா்.