நவராத்திரி விழா: தாண்டியா நடனமாடி கொண்டாட்டம்
புதுவை மாா்வாடி சன்வாரியா சேத் நவராத்திரி மண்டல் சாா்பில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் பெண்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு தாண்டியா நடனம் ஆடினா்.
மேலும், 56 விதமான பிரசாத உணவுகளுடன் துா்க்கைக்கு பூஜை செய்தனா்.
இந்த அமைப்பின் சாா்பில் முத்தியால்பேட்டை தனியாா் திருமண மண்டபத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வாக 56 விதமான உணவு பொருள்களைக் கொண்டு நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் மாா்வாடிகள் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளா்களான ஸ்ரீ பலராம் ஜி சௌதிரி, விக்ரம் வைஷ்ணவ், ராம்நிவாஸ் சௌதிரி, தனராம் ராஜ்புரோஹித், மகாவீா் ஷா்மா மற்றும் சேத்தன் ஷா்மா உள்பட ஏராளமான மாா்வாடிகள் கலந்து கொண்டனா்.