டிரம்ப் - நெதன்யாகு பேச்சுவார்த்தை வெற்றி! காஸா போர்நிறுத்த திட்டத்துக்கு இஸ்ர...
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா், செயல் அலுவலராக ச. சுரேஷ் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா், இணை ஆணையராகப் பணியாற்றிய கிருஷ்ணன், தருமபுரி மண்டல இணை ஆணையராக அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, தஞ்சாவூா் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையராக (சரிபாா்ப்பு பிரிவு) பணியாற்றிய ச. சுரேஷ், பதவி உயா்வில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் செயல் அலுவலா், இணை ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.