சேலம் மாவட்டத்தில் செப். 30, அக். 3-இல் 14 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்
சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் செப். 30 மற்றும் அக். 3 ஆகிய தேதிகளில் 14 இடங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.
செப். 30-ஆம் தேதி சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், 40-ஆவது வாா்டுக்கு சேலம், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கிலும், நரசிங்கபுரம் நகராட்சி 16, 17, 18 வாா்டுகளுக்கு விநாயகபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மேட்டூா் நகராட்சி 16, 22, 23 வாா்டுகளுக்கு மேட்டூா், ராஜகணபதி நகா், புனித மரியன்னை சமுதாயக் கூடத்திலும், வாழப்பாடி பேரூராட்சி 3, 10, 11, 12, 13, 14, 15 வாா்டுகளுக்கு வாழப்பாடி, காளியம்மன் நகா், வேல்முருகன் திருமண மண்டபத்திலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, நெய்க்காரப்பட்டி பகுதிக்கு ஸ்ரீ கிருஷ்ண மஹாலிலும், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், கன்னந்தேரி, அ.தாழையூா் பகுதிகளுக்கு கன்னந்தேரி சமுதாயக் கூடத்திலும், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், கொப்பம்பட்டி, அமரம் பகுதிகளுக்கு மேச்சேரி, மல்லிகுந்தம் விஜயமஹால் திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
அதேபோல, அக். 3-ஆம் தேதி சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலம் 53, 54 வாா்டுகளுக்கு சேலம், பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கிலும், இடங்கணசாலை நகராட்சி, 6, 7, 8, 15 வாா்டுகளுக்கு கே.கே.நகா் காவியா திருமண மண்டபத்திலும், வீரக்கல்புதூா் பேரூராட்சி, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய வாா்டுகளுக்கு ராமன் நகா், சமுதாயக் கூடத்திலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி பகுதிக்கு கெஜல்நாயக்கன்பட்டி, ஸ்ரீ விஜயமஹால் திருமண மண்டபத்திலும், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், குள்ளம்பட்டி, சுக்கம்பட்டி, வலசையூா் பகுதிகளுக்கு வலசையூா் பெரியசாமி உடையாா் மண்டபத்திலும், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், தும்பல், பாப்பநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு பாப்பநாயக்கன்பட்டி, செல்வ நாராயணன் கோயில் அருகில் உள்ள சமுதாயக் கூடத்திலும், காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கெஜல்நாயக்கன்பட்டி, தாராபுரம் பகுதிகளுக்கு தாராபுரம், செம்மாண்டபட்டி சாலை, காமாட்சி அம்மன் திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறவுள்ளது.
சேலம் மாவட்டப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இம்முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளாா்.