ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 538 மனுக்கள் அளிப்பு
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 538 மனுக்கள் அளிக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 19 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.
ஜருகுமலை கிராமம், குரால்நத்தம் ஊராட்சியில் தாட்கோ மூலம் ரூ. 44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை முதல்வா் ஸ்டாலின் திறந்துவைத்ததைத் தொடா்ந்து, மரகத பெண்கள் மகளிா் சுய உதவிக்குழு மூலம் இச்சமுதாயக் கூடத்தை பொதுமக்களின் சுபநிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்வதற்கான ஆணையை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) விவேக் யாதவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.