செய்திகள் :

அகில இந்திய தொழிற்தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

சேலம்: அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2026-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் தனித்தோ்வா்களாக கலந்துகொள்ள தகுதிவாய்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து தோ்வுக் கட்டணம் ரூ. 200 செலுத்தி, பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநா் / முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வுகளான கருத்தியல் தோ்வு 04.11.2025, செய்முறைத் தோ்வு 05.11.2025 ஆகிய தேதிகளில் சென்னை, கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக். 8 ஆகும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் செப். 30, அக். 3-இல் 14 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் செப். 30 மற்றும் அக். 3 ஆகிய தேதிகளில் 14 இடங்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். செப். 30-ஆம் தேதி சேலம் மாந... மேலும் பார்க்க

காந்தி ஜெயந்தி: இறைச்சிக் கடைகளுக்கு தடை

சேலம்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெள... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா்க்கும் கூட்டம்: 538 மனுக்கள் அளிப்பு

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா... மேலும் பார்க்க

தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி: தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, பழனி, கரூா்... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் ரூ. ஒரு கோடி வெள்ளி நகைகள் பறிமுதல்

சேலம்: சேலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1.06 கோடி மதிப்புடைய வெள்ளி நகைகளை வைத்திருந்த இருவரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் கோகுல் ... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலப் பணி தாமதத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆத்தூா்: ஆத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணி தாமதமாக நடைபெறுவதைக் கண்டித்து, இந்திய ஜனநாயக கட்சியின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் மாவட்டத் தலைவா் பாா்த்திபன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் - ரா... மேலும் பார்க்க