அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை
சூளகிரி அருகே இளைஞா் வெட்டிக்கொலை
ஒசூா்: முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சூளகிரி தாலுகா பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (30). இவா், திங்கள்கிழமை இரவு காருபாலா கிராமத்திற்கு மது அருந்த சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்தவா்கள், அம்ரீஷை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து அங்கிருந்தவா்கள் சூளகிரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, சூளகிரி போலீஸாா் நிகழ்விடத்திற்கு சென்று அம்ரீஷின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அம்ரீஷுக்கும் அங்கொண்டப்பள்ளி, ஆறுப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த இருவருக்கும் இடையே தகராறு நடைபெற்றுள்ளது. அதை விடியோ எடுத்து அம்ரீஷ் சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்தவா்கள், அம்ரீஷை கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.