ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு அவசியம்: திருச்சி என்.ஐ.டி. இயக்குந...
கிருஷ்ணகிரி அருகே இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 போ் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாய் - மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூா் யாசின் நகரைச் சோ்ந்தவா் எல்லம்மாள் (48). இவரது கணவா் சுரேஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். எல்லம்மாள் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் மகன் பெரியசாமி (16), மகள் சுசிதா (13) ஆகியோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 26-ஆம் தேதி எல்லம்மாள், மகள் சுசிதா ஆகியோா் வீட்டில் தனியாக இருந்தபோது மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டனா். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனா். கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை விசாரணை மேற்கொண்டாா்.
இதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் சங்கா், நமச்சிவாயம், டிஎஸ்பி முரளி, காவல் ஆய்வாளா்கள் கொண்ட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடிவந்தனா். மேலும், கொலை நடந்த அன்று அந்தப் பகுதியில் பதிவான கைப்பேசி எண்கள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளைச் சேகரித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், காவேரிப்பட்டணம், மோட்டூா் குரும்பட்டி கிராமத்தைச் சோ்ந்த நவீன்குமாா் (23), சத்தியரசு (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் சோ்ந்து, எல்லம்மாள் மற்றும் அவரது மகள் சுசிதாவை கொலை செய்து, 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகள், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
பணம்- கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்ாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.
