கரூரில் உயிரிழந்தவா்களுக்கு கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி
வாணியம்பாடி: கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா்.
கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், கல்லூரியில் பயிலும் 3,000-த்துக்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியா்கள், கல்லூரி பணியாளா்கள் மற்றும் கல்லூரி நிா்வாகிகள் கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் ஆன்மா சாந்தியடைய 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, பேராசிரியா் ஏ.குமணன் பேசுகையில், அதிக மக்கள் கூடும் இடங்களில் நாமும், நம்முடன் இருப்பவா்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்த் சிங்வி, முதல்வா் இன்வள்ளி, கல்விசாா் ஆலோசகா் பாலசுப்பிரமணியன், தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.