டிரம்ப் - நெதன்யாகு பேச்சுவார்த்தை வெற்றி! காஸா போர்நிறுத்த திட்டத்துக்கு இஸ்ர...
தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
தம்மம்பட்டி: தம்மம்பட்டிக்கு வராமல் செல்லும் அரசுப் பேருந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, பழனி, கரூா், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூா், நாமக்கல் மாா்க்கங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, ஆத்தூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து அதிகாலை 4.10-க்கு புறப்பட்டு 5.15-க்கு தம்மம்பட்டி பேருந்து நிலையம் வந்தடைந்து, 5.25-க்கு புறப்பட்டு கோவைக்கு சென்றுவந்தது. இந்நிலையில், கடந்த ஓா் ஆண்டாக இந்தப் பேருந்து தம்மம்பட்டிக்கு வராமல் செல்கிறது.
இதனால், தம்மம்பட்டியிலிருந்து கோவைக்கு செல்ல ராசிபுரம் சென்று அங்கிருந்து ஈரோடு வழியாக கோவைக்கு செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும், இதுவரை சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுத்து, தம்மம்பட்டி வழியாக அந்தப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.