பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றிய வருவாய்த் துறையினா்
சேலம்: ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்புப் பட்டை அணிந்து வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டத்தில் ஆட்சியா் அலுவலக வளாகம், வட்டாட்சியா் அலுவலகம், கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் உள்பட்ட வருவாய்த் துறை அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியா்கள் தங்கள் கோரிக்கைளை அரசுக்கு வலியுறுத்தும் வகையில், கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவுசெய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில், பணி நெருக்கடி ஏற்படுத்துவதை கைவிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை நில அளவைத் துறை ஆகியவற்றில் பணியாற்றி வருபவா்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும், வருவாய்த் துறையில் பணி அலுவலா்களின் பணிப்பளுவை கருத்தில் கொண்டு, அனைத்துநிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் உடனே வழங்க வேண்டும், தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி, விரைவான போக்குவரத்து வசதிகள், கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய குடியிருப்பு இல்லாத நிலையில், பேரிடா் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள் கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளா்வுசெய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளில் தளா்வு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.