செய்திகள் :

What to watch - Theatre & OTT: இட்லி கடை, காந்தாரா, Sunny Sanskari; இந்த ஆயுத பூஜை ரிலீஸ்கள்

post image

இட்லி கடை (தமிழ்)

இட்லி கடை
இட்லி கடை

தனுஷ் இயக்கி, நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் இன்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியாகிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருக்கின்றனர்.

சாதாரண கிராமத்தில் பிறந்து பெரிய ஸ்டார் ஹோட்டலில் செஃப்பாக இருக்கும் தனுஷ், மீண்டும் தனக்கு ஆத்மார்த்தமாக இருக்கும் அப்பாவின் இட்லி கடை தொழிலை தொடங்கி தடைகளைத் தாண்டி முன்னேறுவதுதான் இதன் கதைக்களம்.

Kantara: A Legend Chapter-1

Kantara Chapter 1
Kantara Chapter 1

2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பையும், வசூலையும் அள்ளியது. இப்போது முந்தையப் படத்தைவிடவும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1’ படம் பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் அக்டோபர் 2ஆம் தேதி (வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது.

Sunny Sanskari Ki Tulsi Kumari (இந்தி)

Sunny Sanskari Ki Tulsi Kumari
Sunny Sanskari Ki Tulsi Kumari

ஷஷாங் கைதன் இயக்கத்தில் வருண் தவான், ஜான்வி கபூர், சான்யா மல்கோத்ரா, ரோஹித் ஷரப் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Sunny Sanskari Ki Tulsi Kumari'. காமெடி ரொமாண்டிக் திரைப்படமான இது அக்டோபர் 2ஆம் தேதி (வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது.

ஓடிடி ரிலீஸ்

மதராஸி (தமிழ்)

மதராஸி
மதராஸி

Madharaasi Review: ஆக்‌ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜமால், பிஜு மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியானது 'மதராஸி'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இப்போது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Little Hearts (தெலுங்கு)

Little Hearts
Little Hearts

சாய் மார்த்தாண்ட் இயக்கத்தில் மௌலி, தனுஜ் பிரசாந்த், ஷிவானி, ராஜீவ் கனகலா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'Little Hearts' படத்தின் Extended Version இப்போது 'E tvwin' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

Maine pyar kiya (மலையாளம்)

Maine pyar kiy
Maine pyar kiy

பைசல் ஃபாசிலுதீன் இயக்கத்தில் ஹிரிது ஹரூன், ஜெகதீஸ் மற்றும் நடிகை ப்ரைட்டி முகுந்தனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Maine pyar kiya'. காதல் அரட்டைகள், நட்பு அதன் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை ஜாலியாகப் பேசும் இத்திரைப்படம் 'Simply South' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

``சரியானவர்களை பின்பற்ற வேண்டும்; இல்லையென்றால் தவறாக வழிநடத்தப்படுவோம்'' - இயக்குநர் வெற்றிமாறன்

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், "சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை இதையெல்லாம் நாம் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. அப்படிச் செ... மேலும் பார்க்க

புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்!

நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறா... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "உயிரிழந்தோரைக் கண்டு பெருந்துயர் கொள்கிறோம்" - STR49 படக்குழு

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரையில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் நடைபெற்றது.கரூர் சோகம்விஜய்யைக் காணக் கூடியவர்களில் பலர் க... மேலும் பார்க்க

Sasikumar: "என் வளர்ச்சிக்காக இந்தப் படத்தில சசி அண்ணா நடிக்க ஒத்துக்கிட்டாரு" -'யாத்திசை' இயக்குநர்

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2023-ம் ஆண்டு தரணி ராசேந்திரன் இயக்கத்தில்... மேலும் பார்க்க